Sunday, October 27, 2013

ananya motors and vadivel coffee works

அனன்யா மோட்டார்ஸ் பெரியகுளம் . பெரியகுளம் மாநகரில் உலகின் no 1 ஹீரோ நிறுவனத்தின் பிரமாண்டமான ஷோ ரூம் , 5 வருட இஞ்சின் வாரண்டியுடன் , நிருபிக்கபட்ட செயல் திறன் , அதிர்வற்ற சொகுசான பயணம் , மிக குறைந்த பராமரிப்பு செலவு நிகரற்ற ரீ சேல் மதிப்பு , சராசரி milege 70 km, மிக குறைந்த வட்டி விகிதம் , உடனடி டெலிவரி , அதி நவீன  சர்வீஸ்   வசதியுடன் உங்கள் வாகனம் விரைவில் டெலிவரி செய்யப்படும்  வாருங்கள் உலகின் no 1 ஹீரோ குடும்பத்துடன் இணையுங்கள் , ஹீரோ குடும்பத்தால் தேசத்திற்கு பெருமை , ஹீரோ வாடிக்கையாளர்களால் எங்களுக்கு பெருமை .

அனன்யா மோட்டார்ஸ் , rmtc  டிப்போ அருகில் , மதுரை ரோடு , வடகரை , பெரியகுளம் , போன் 04546 23431 , செல் 7871872286  


வடிவேல் காபி ஒர்க்ஸ்

 63 ஆண்டு பாரம்பரியமிக்க வடிவேல் காபி ஒர்க்ஸ் , தன்னோட செவைய விரிவு படுத்தி மக்களோட பயணங்களை சுலபமா மாத்த இந்தியா முழுக்க பயணம் செய்ய பஸ் , ரயில்  டிக்கெட்  , உலகம் முழுக்க பறக்க விமான டிக்கெட்டுகள் முன் பதிவு செய்ய அங்கிகாரம் பெற்ற முன் பதிவு மையமா செயல் பட்டு வராங்க , மேலும் கூரியர் மற்றும் fax அனுப்பும் வசதியும் உண்டு ,

வடிவேல் காபி ஒர்க்ஸ் travels அண்ட் கூரியர் no 90 mgr ரோடு மூன்றந்தால் , தென்கரை , பெரியகுளம்      

Sunday, March 24, 2013

விஸ்வரூபம் தமிழ் நாட்டில் ரிலீஸ் இல்லை . ஆந்திரா சத்தியவேடு சீனிவாசா thetre அனுபவம் .


தாமதமான பதிவு மன்னிக்கவும் , தமிழ் நாட்டில் விஸ்வரூபம் இழுத்தடிக்க,   7 காட்சிகள் கட் என்று பல வதந்திகள் பரவ , நானும் எனது நண்பன் இளையராஜாவும் ஆந்திரா சத்தியவேடு ஸ்ரீனிவாச திரை அரங்கு செல்ல முடிவு எடுத்தோம்.

சண்டே காலை 10 மணிக்கு எடுக்கப்பட்ட முடிவு . எனது இருப்பிடம் அசோக் நகர் , அவனது இருப்பிடம் கோயம்பேடு , எனது discover 150 சசி பைக்கில் புறப்பட்டோம்.
மிக வேகமாக சென்று படத்தை பார்த்து விட வேண்டும் என்று 90 , 100 வேகத்தில் பைக்கில் ஆந்திரா  சத்தியவேடு வந்தோம் 12 மணிக்கு , ஊரே மிக பரபரப்பாய் இருந்தது .  சீனிவாசா திரை அரங்கம் எங்கு உள்ளது , என்று விசாரித்து சென்றால் நான் மட்டும் கமல் வெறியன் என்று நினைத்தால் பாதி சென்னையே அங்குதான் இருந்தது .

தம்மாதுண்டு கிராமம் , 500  சீட்டுள்ள அரங்கம் ,  ஆனால் 100 கும் மேற்பட்ட கார்கள், 500 கும் மேற்பட்ட பைக்குகள்
ஆயிரத்துக்கும் மேல் ரசிகர்கள் ,என்ன செய்வதென்று புரியவில்லை ,
ஒரே களபரம் , எனது நண்பனை டிக்கெட் கவுன்டரில் நிற்க வைத்து நான் உற்சாக பானம் குடித்து விட்டு உனக்கும் வாங்கி வருகிறேன் , என்று சொல்லி கடைக்குள் நுழைந்தால் அங்கு பிரைவேட் தான் தமிழ் நாட்டில் விற்பதை விட அங்கு விலை அதிகம், போய் தொலைகிறது என்று பாருக்குள் சென்றால் அங்கு நம்ம பய புள்ளக 50 , 60  பேர் இருக்காங்க , என்னனு விசாரிச்சா,  நீ என்ன டைம் வந்தேன்னு கேட்டாங்க , நான் 12 மணின்னு சொன்ன ,
போங்க பாஸ் நாங்க 9 மணி என்று 3 வது குவாட்டர் முழுசா உள்ள போய்கிட்டு இருந்தந்து .
நானும் அடித்துவிட்டு எனது நண்பனுக்கும் வாங்கி (பெப்சி பாட்டிலில் மிக்ஸ் பண்ணி) கொண்டு போனா , அங்க கூட்டம் அதிகமாகி இருந்திச்சே தவிரே டிக்கெட் குடுத்தே பாடில்லை ,
அந்த திரை அரங்கு ஒனரோ நடப்பது கனவா , இல்லை நினைவா என்று கூட்டத்தை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.
எனது நண்பரின் வேலையை நான் வாங்கி கொண்டு கவுன்டரில் நின்றால் நோ மூவ் , பட் 10 நிமுசத்துல டிக்கெட் காலி, என்னடா நடுக்குதுன்னு பார்த்த அங்கயூம் ப்ளாக் டிக்கெட் 250 ரூபா ,
எப்படியோ படம் பார்த்தே ஆகணும்னு வாங்கி உள்ள போனா .. சீட்டே கிடயாது.  நின்னுகிட்டே படம் பார்க்கணும்னு ஏன்னு தோணி என் ப்ரெண்ட் கிட்ட சொன்னேன் , வாடா போலாம் , சென்னை வந்த பிறகு பார்க்கலாம்னு .. அவன் விடலை.  நின்னுகிட்டே படம் பார்த்தோம் 10 நிமுசம் கொஞ்சம் போர் அடுச்சு ஏன்டா படம் வந்தோம்னு இருந்துச்சு . இவன் யார் என்று தெரிகிறதா .... பாடல் வந்த பிறகு, கால் வலி , எங்கையோ போச்சு , படம் பார்க்க , பார்க்க அருமை . இடை வேளையில் , பாதி சட்டை இல்லாமல் தான் இருந்தோம்.,.. எப்படியோ படம் பார்த்து வெளியே வந்தால் , அடுத்த காட்சிக்காக இரண்டு மடங்கு கூட்டம் , சென்னை போனால் சரி என்று 7.30 மணிக்கி
ட்ராபிக் கூட்டத்தை சமாளிக்க சில வீடுகளில் புகுந்து சென்னை வந்தோம் .    ஆனாலும் இவ்ளோ
கஷ்டபட்டாலும் படம் செம சூப்பர்.    உலக நாயகன் வாழ்க ...........
 

Saturday, March 23, 2013

ஹோட்டல் பசி.காம் (மண்பானை சாதம்) காசி தியட்டர் அருகில் ..............

மண்பானை சாதம் போர்டை பார்த்தவுடன் உள்ளே சென்றோம்.   ஹோட்டல் சிறியதாக இருந்தாலம் மிக  சுத்தமாக இருந்தது .  இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது .  மண்பானை சாதம் என்று மண்பானையை
எழுதி பானையை கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தது . சாதாரண ப்ளேட்டில் தான் கொண்டு வந்தார்கள் ..

ஆனாலும் சாதம் மிகவும் சூடாகவும் மண்பானை பததுகே ஊரிய கொளைந்து இருந்தது .சாதத்திற்கு மீன் குழம்பு வேண்டுமா என்று கேட்டார்கள்,  பல ஹோடேல்களில் மீன் குழம்பு சாப்பிடவே பிடிக்காது , அதை மனதில் வைத்து கொண்டு சிறிதளவே ஊற்ற சொன்னேன் , மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் வீட்டு சுவைபோல்
அருமையாய் இருந்தது , மீன் வாசனை இல்லாமல் நன்றாக இருந்தது , சிக்கன் குழம்பும் வீட்டில் வைப்பது போல் அருமை ,அடுத்தடுத்து சாம்பார் ,ரசம், மோர் , என அனைத்தும் அருமை , சைடு டிஷாக வஞ்சிரம் மீன் வாங்கினோம். நல்ல மசாலா நல்ல காரம் மீன் நன்றாக இருந்தது , 

ஹோடேளை சுற்றிலும் உணவைபற்றிய விலை மற்றும் கம்போ ஆப்பெர்களை அறுவித்து இருந்தார்கள் , ஒரு அறிவிப்பில் இந்த ஹோடேலில் அஜினோ மோடோ சேர்பதில்லை என்றும் உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த பொருளும் சேர்பதில்லை என்றும் எழுப்பட்டுள்ளது.

சுவையாகவும், சிக்கனமாகவும்,ஆரோக்யமான மண்பானை சாதம். என்று காசி தியேட்டர் அருகில் நல்ல ஹோட்டல் பசி.காம்   

இலங்கை பிரச்சனையில் வாய் திறக்காத அப்துல் கலாம் அவர்களுக்கு மாணவர் செல்வகுமார் அனுப்பிய கடிதம் ............
மாணவர் செல்வகுமார் அனுப்பியது.....
--------------------------------------------------------------------
ஐயா.... அப்துல் கலாம் அவர்களே.....

...
பள்ளிப் பருவத்தில் இருந்தே உங்களை கனவு நாயகனாக நினைத்து போற்றி வளர்ந்தவன் நான்.
எம் இந்தியாவை வல்லரசாக்கிய தமிழன் என்று மார் தட்டி இருக்கிறேன். இந்தியாவின் திறமையான குடியரசு தலைவராக இருந்தவர் என்று உலகமே உங்களை போற்றி இருக்கிறது.
அடிமட்டத்தில் இருந்து உழைப்பால் மேலே வந்தவர் என்று உங்களை முன் மாதிரியாக கொண்டு முன்னேறி வருகிறேன்.
மாணவர்களிடம் எழுச்சி வேண்டும் என்று எங்கள் கல்லூரிக்கு எல்லாம் வந்து எங்களை வளர்த்து விட்டது நீங்கள்தான்.
ஐயா... உங்களை ஆசானாக கொண்டு வளர்ந்து வரும் மாணவர்கள் நாங்கள் இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வருகிறோமே... உங்களுக்கு இந்த செய்திகள் எல்லாம் வந்து சேருகிறதா?
தமிழர் என்பதால் கேட்கவில்லை. இந்தியராக கேட்கிறேன்... தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஏன் யோசிக்கிறீர்கள்?
இந்தியன் என்ற உணர்வு எங்களுக்கும் இருக்கிறது ஐயா.
இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பது இந்தியர்கள் நிம்மதியாக பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக தானே ஐயா.
மீன் பிடிக்க செல்லும் நம் சகோதரர்கள் அண்டை நாடால் கொல்லப்படுவது கூடவா உங்களுக்கு கேட்கவில்லை.
இது குறித்து எதுவும் வாய் திறக்க மறுக்கின்றீர்களே ஐயா? மனம் கொதிக்கிறது.
எந்த அரசியல் கட்சியையும் நம்ப நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் செய்வது தவறு என்றாலும் நீங்கள் சொல்லி திருத்தலாமே?
எதுவும் கூறாமல் மவுனித்து இருப்பது ஏன்?நாதஸ்வரம் கோபி : நான் தாண்ட நல்லவன் மத்தே எல்லாரும் கேட்டவங்கடா (T R இன் அடுத்த நகல் )

1980களில் நம்மை கடைந்து பிழிந்து சோகங்களையும் சந்தோசங்களையும் கொடுத்தவர்களில் T R , பாக்யராஜ் , பாரதிரராஜா ,மற்றும் பாண்டியராஜ் , மேலும் பலர் (புல் தகவல் எனக்கு தெரியாது , இவர்களுக்கும்  இந்த பதுவுக்கும் சம்பந்தம் இல்ல , அத விட நான் பொறந்ததே 1986 ல் அதுனால எனக்கு தெருஞ்சு பாச மலைய கொட்ற்றதுல்ல T r தான் எனக்கு தெரியும் அதுனால என்னோட பதிவ தொடர்கிறேன் ..........


எனக்கு தெருச்ஞ்சு குடும்பத்தோட அனைவர்க்கும் கெட்டவனா இருந்துதும் , எல்லா குடும்ப உறுப்பினர்கள் கூட பாசமா இருந்தவர் நம்மவர் . அதிலும் அவரோட தங்கச்சின்னா எல்லை கடந்த பாசம் இருக்கும் படத்தோட முழு கதையும் அவோரோட தங்கச்சி தான் .

ஆனா அவோரோட கதையில் நல்ல பாருங்க அவர் மட்டும் நல்லவரா இருப்பார் . மத்தே எல்லாருமே (தங்கச்சி லவர் கூட )கெட்டவர் தான் .,      கஷ்டம் வரப்ப எல்லாம் அவர் கொடுக்குற reaction இருக்கே அப அபா சொல்ல முடியாது


இப்போ அவரோட xerox வந்துட்டார் அவர் தான் .   ஒன் அண்ட் ஒன்லி நாதஸ்வரம் கோபி ..

ஐயோ ராமா இந்த சீரியலில் இவர் பண்ணும் தொல்லை தாங்கலட சாமீ ......இவர் மட்டும் தான் இந்த தொடரில்  மிக மிக மிக மிக மிக நல்லவர் ,     மத்த யாரும் நல்லவங்க இல்லியான்னு நீங்க கேக்கலாம் .  ஆனா அவங்க எல்லாரும் முன்னாடி ரொம்ப ரொம்ப கெட்டவங்க ...
கெட்டவங்களா இருப்பானாக நம்ம கோபி சண்ட போட்டு , சமாதனம் ஆயி ஆயி ஆயி ஆயி ... அவுங்கள  திருத்துவார் .  இதுவும் இவர் வேலை தான் (வேலைனா எழுத்து, இயக்கம், கதை , இயக்கம் ) எல்லாமே ராசாதான் ......

ஆனா பயபுள்ள யாரையுமே ஆரம்பத்தில் நல்லவனா காட்ட பிடிக்காது ,  அப்படி காட்டுனா அவன் கண்டிப்பா பின்னாடி கெட்டவனா இருப்பான் ....இப்படி தான் இவங்க சொந்த காசுல நெறைய பேரு கேட்டவிங்க நல்லவங்களும் .......... நல்லவங்க கெட்டவங்களா காட்டிகிட்டு இருக்காங்க ...... கோபி  நீங்க எப்ப நெகடிவ் ரோல் பண்ணுவிங்க..........