Saturday, March 23, 2013

இலங்கை பிரச்சனையில் வாய் திறக்காத அப்துல் கலாம் அவர்களுக்கு மாணவர் செல்வகுமார் அனுப்பிய கடிதம் ............




மாணவர் செல்வகுமார் அனுப்பியது.....
--------------------------------------------------------------------
ஐயா.... அப்துல் கலாம் அவர்களே.....

...
பள்ளிப் பருவத்தில் இருந்தே உங்களை கனவு நாயகனாக நினைத்து போற்றி வளர்ந்தவன் நான்.
எம் இந்தியாவை வல்லரசாக்கிய தமிழன் என்று மார் தட்டி இருக்கிறேன். இந்தியாவின் திறமையான குடியரசு தலைவராக இருந்தவர் என்று உலகமே உங்களை போற்றி இருக்கிறது.
அடிமட்டத்தில் இருந்து உழைப்பால் மேலே வந்தவர் என்று உங்களை முன் மாதிரியாக கொண்டு முன்னேறி வருகிறேன்.
மாணவர்களிடம் எழுச்சி வேண்டும் என்று எங்கள் கல்லூரிக்கு எல்லாம் வந்து எங்களை வளர்த்து விட்டது நீங்கள்தான்.
ஐயா... உங்களை ஆசானாக கொண்டு வளர்ந்து வரும் மாணவர்கள் நாங்கள் இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வருகிறோமே... உங்களுக்கு இந்த செய்திகள் எல்லாம் வந்து சேருகிறதா?
தமிழர் என்பதால் கேட்கவில்லை. இந்தியராக கேட்கிறேன்... தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஏன் யோசிக்கிறீர்கள்?
இந்தியன் என்ற உணர்வு எங்களுக்கும் இருக்கிறது ஐயா.
இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பது இந்தியர்கள் நிம்மதியாக பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக தானே ஐயா.
மீன் பிடிக்க செல்லும் நம் சகோதரர்கள் அண்டை நாடால் கொல்லப்படுவது கூடவா உங்களுக்கு கேட்கவில்லை.
இது குறித்து எதுவும் வாய் திறக்க மறுக்கின்றீர்களே ஐயா? மனம் கொதிக்கிறது.
எந்த அரசியல் கட்சியையும் நம்ப நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் செய்வது தவறு என்றாலும் நீங்கள் சொல்லி திருத்தலாமே?
எதுவும் கூறாமல் மவுனித்து இருப்பது ஏன்?



No comments:

Post a Comment