Sunday, March 24, 2013

விஸ்வரூபம் தமிழ் நாட்டில் ரிலீஸ் இல்லை . ஆந்திரா சத்தியவேடு சீனிவாசா thetre அனுபவம் .


தாமதமான பதிவு மன்னிக்கவும் , தமிழ் நாட்டில் விஸ்வரூபம் இழுத்தடிக்க,   7 காட்சிகள் கட் என்று பல வதந்திகள் பரவ , நானும் எனது நண்பன் இளையராஜாவும் ஆந்திரா சத்தியவேடு ஸ்ரீனிவாச திரை அரங்கு செல்ல முடிவு எடுத்தோம்.

சண்டே காலை 10 மணிக்கு எடுக்கப்பட்ட முடிவு . எனது இருப்பிடம் அசோக் நகர் , அவனது இருப்பிடம் கோயம்பேடு , எனது discover 150 சசி பைக்கில் புறப்பட்டோம்.
மிக வேகமாக சென்று படத்தை பார்த்து விட வேண்டும் என்று 90 , 100 வேகத்தில் பைக்கில் ஆந்திரா  சத்தியவேடு வந்தோம் 12 மணிக்கு , ஊரே மிக பரபரப்பாய் இருந்தது .  சீனிவாசா திரை அரங்கம் எங்கு உள்ளது , என்று விசாரித்து சென்றால் நான் மட்டும் கமல் வெறியன் என்று நினைத்தால் பாதி சென்னையே அங்குதான் இருந்தது .

தம்மாதுண்டு கிராமம் , 500  சீட்டுள்ள அரங்கம் ,  ஆனால் 100 கும் மேற்பட்ட கார்கள், 500 கும் மேற்பட்ட பைக்குகள்
ஆயிரத்துக்கும் மேல் ரசிகர்கள் ,என்ன செய்வதென்று புரியவில்லை ,
ஒரே களபரம் , எனது நண்பனை டிக்கெட் கவுன்டரில் நிற்க வைத்து நான் உற்சாக பானம் குடித்து விட்டு உனக்கும் வாங்கி வருகிறேன் , என்று சொல்லி கடைக்குள் நுழைந்தால் அங்கு பிரைவேட் தான் தமிழ் நாட்டில் விற்பதை விட அங்கு விலை அதிகம், போய் தொலைகிறது என்று பாருக்குள் சென்றால் அங்கு நம்ம பய புள்ளக 50 , 60  பேர் இருக்காங்க , என்னனு விசாரிச்சா,  நீ என்ன டைம் வந்தேன்னு கேட்டாங்க , நான் 12 மணின்னு சொன்ன ,
போங்க பாஸ் நாங்க 9 மணி என்று 3 வது குவாட்டர் முழுசா உள்ள போய்கிட்டு இருந்தந்து .
நானும் அடித்துவிட்டு எனது நண்பனுக்கும் வாங்கி (பெப்சி பாட்டிலில் மிக்ஸ் பண்ணி) கொண்டு போனா , அங்க கூட்டம் அதிகமாகி இருந்திச்சே தவிரே டிக்கெட் குடுத்தே பாடில்லை ,
அந்த திரை அரங்கு ஒனரோ நடப்பது கனவா , இல்லை நினைவா என்று கூட்டத்தை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.
எனது நண்பரின் வேலையை நான் வாங்கி கொண்டு கவுன்டரில் நின்றால் நோ மூவ் , பட் 10 நிமுசத்துல டிக்கெட் காலி, என்னடா நடுக்குதுன்னு பார்த்த அங்கயூம் ப்ளாக் டிக்கெட் 250 ரூபா ,
எப்படியோ படம் பார்த்தே ஆகணும்னு வாங்கி உள்ள போனா .. சீட்டே கிடயாது.  நின்னுகிட்டே படம் பார்க்கணும்னு ஏன்னு தோணி என் ப்ரெண்ட் கிட்ட சொன்னேன் , வாடா போலாம் , சென்னை வந்த பிறகு பார்க்கலாம்னு .. அவன் விடலை.  நின்னுகிட்டே படம் பார்த்தோம் 10 நிமுசம் கொஞ்சம் போர் அடுச்சு ஏன்டா படம் வந்தோம்னு இருந்துச்சு . இவன் யார் என்று தெரிகிறதா .... பாடல் வந்த பிறகு, கால் வலி , எங்கையோ போச்சு , படம் பார்க்க , பார்க்க அருமை . இடை வேளையில் , பாதி சட்டை இல்லாமல் தான் இருந்தோம்.,.. எப்படியோ படம் பார்த்து வெளியே வந்தால் , அடுத்த காட்சிக்காக இரண்டு மடங்கு கூட்டம் , சென்னை போனால் சரி என்று 7.30 மணிக்கி
ட்ராபிக் கூட்டத்தை சமாளிக்க சில வீடுகளில் புகுந்து சென்னை வந்தோம் .    ஆனாலும் இவ்ளோ
கஷ்டபட்டாலும் படம் செம சூப்பர்.    உலக நாயகன் வாழ்க ...........
 

No comments:

Post a Comment